ஞாயிறு, 16 ஜனவரி, 2011

காவலன்-சூப்பர் டூப்பர் ஹிட்

ஜனவரி 14 அன்று திரையரங்கங்களை காணவேண்டிய  காவலன்  நேற்று வெளிவந்து   ஒட்டுமொத்த  தமிழர்களின்  இனிப்பாக  மாறியுள்ளது. வாழ்த்துக்கள்  இளைய  தளபதி  விஜய்க்கும்  காவலன்  குழுவினர்க்கும். கடந்த  ஒரு  மாத  காலமாகவே   விஜய்  ரசிகர்கள்  தங்கள்  காவலனை  காண முடியுமா? என்று  சற்றே   கலங்கிபோயிருந்தனர். காரணம்  தயாரிப்பு  தரப்பிலிருந்து  ஜனவரி 14  முதல் என்று  அறிவிக்கப்பட்டிருந்தாலும், சென்னையில்  எந்த  திரையரங்கிலும்   வெளிவருவதற்கான  எந்த  முகாமையும்  காணப்படவில்லை.  காவலன்  பற்றிய  மிக  குழப்பமான  செய்திகளையே   பத்திரிகைகளும்  வெளியிட்டுவந்தன. ஆனால்  எல்லா  சிக்கல்களையும்  தகர்த்து  வெள்ளித்திரையில்  காவலனை  மின்னவிட்டுள்ளார்  இளையதளபதி  விஜய். இப்படி  ஒரு  படத்திற்காக  15  கோடி  என்ன  எத்தனை  கோடி வேண்டுமானாலும்  கொடுத்து  வெளியிடலாம். இக்கட்டான   சூழ்நிலையில்  படத்தை வெளியிட  விஜய்  எடுத்த  புத்திசாலிதனமான, தைரியமான  முடிவை  பாராட்டியே ஆக  வேண்டும். நிஜமாகவே  விஜய்  ஒரு  காவலன்.
                        காவலன்   வெளிவருமா?  வராதா?  என்ற  குழப்பத்திலும்  சத்யம், அபிராமி  போன்ற  மல்டிப்ளெக்ஸ்  திரையரங்குகளில்  அதிகம்  விசாரிக்கப்பட்டதும் ,  இணையத்தில்  முன்பதிவிற்கு  அதிகம் தேடப்பட்டதுமான  படம்  காவலன்  என்பதே  படத்தின்  வெற்றிக்கு  அடித்தளம்.                                                                                  
                       சொல்லப்போனால்  மிகப்பெரிய  இடைவெளியில்  விஜயின்  மிகச்சிறந்த  படம்  காவலன். படத்தின்  எல்லா  பிரேமிலும்   திரைக்கதை  நம்மை  சோர்வில்லாமல்  பயணிக்க  வைக்கிறது. கனமான  கதாபாத்திரத்தில்(பூமிநாதன்)   இளைய  தளபதி  விஜய்  நம்  கண்களுக்குள்  எளிதில்   குடியேறிவிடுகிறார். விஜய்க்கு  இணையான  மற்றொரு  (மீரா) கதாபாத்திரத்தில்  அசின் நம்மை  நெகிழ  வைத்திருக்கிறார். வீட்டிலும், கல்லூரியிலும்  விஜயை  கலாய்ப்பதிலும்  சரி, விஜயிடம்  தான்தான்  உன்னை  காதலிக்கிறேன்  என  சொல்லத்துடிக்கும்  காட்சிகளிலும்  சரி  அசின் அனைவரையும்  கவர்கிறார். அசினின் தோழியாக  வரும் மித்ராவும்  கிளைமாக்ஸ்  காட்சிகளில் நம்மை  ஆச்சர்யப்படுத்துகிறார்.விஜயின்  நண்பராக வரும்  வடிவேலு  காமெடியில்  நம் விலா  நோக  வைக்கிறார். விஜயும்   வடிவேலுவும்  கதையோட்டத்தோடு  இணைந்த  காமெடியில்  கலக்கியிருக்கிறார்கள்.
                       அசினின்  தந்தையாக  வரும்  ராஜ்கிரண்  கச்சிதமாய்   பொருந்தியிருக்கிறார்  அவருடைய  கதாபாத்திரத்தில். விஜயோடு   இணைந்த  ஒரு  சண்டை  காட்சியிலும் ,விஜய்  அசினை   கடத்திசென்றதை  அறிந்து  அவரை  பிடித்து  உதைக்கும்   காட்சியிலும்  மிரட்டியிருக்கிறார். ராஜ்கிரண்  மனைவியாக  வரும்  ரோஜா  தனக்கு  சொல்லப்பட்டதை  செய்திருக்கிறார். பேசிக்கொண்டு  இருக்கும்போதே   உறங்கிப்போகும்  எம். எஸ்.பாஸ்கர்  விழித்தவுடன்  தலைவாரிக்கொள்ளும்   மானரிசம்  பிடித்திருக்கிறது.
                        எந்த  பெண்ணிடமும்  மயங்காத   விஜய், தன்னோடு   பேசும்  முகம்  தெரியாத  பெண்  தன்  சிறுவயது   பள்ளித்தோழி  அம்முகுட்டி  என  நினைத்து   காதலில்  உருகுவதும்  ஹைகிளாஸ்  கவிதை. அப்பாடா  எத்தனை  வருடங்களாகிறது  இளைய  தளபதியை   இப்படி  காதல் காட்சிகளில்  காண்பதற்கு. ரசிகர்களின்   தவம்  வீண்போகவில்லை.  குறும்பு  காட்சிகளிலும், உறுமும்  காட்சிகளிலும் , காதலில்  உழலும்  காட்சிகளிலும்   விஜய்  விஜய்தான். மலையாள   திலிப் குமாரின்  சிறந்த  தமிழ்  தேர்வு  விஜயாக   மட்டுமே  இருக்கமுடியும்  என்பதை  சித்திக்  சிரமே  உணர்ந்திருப்பார். அசின்  விஜயை  காதலித்தாலும்  நேரில்  சொல்லமுடியாத  காதலை  நினைத்து  அழும்போது   நம்மை  நெகிழவைக்கிறார்.
                        விஜய்  தன் நடை, உடை, நடனம் என  நம்மை  வெகுவாய்  கவர்கிறார். குறிப்பாக  தன்  அம்முகுட்டியை  நேரில்  சந்திப்பதற்கு  முன்பாக   அவளிடம்  எப்படி  பேசவேண்டுமென   அசினிடம்  ஒத்திகை  பார்க்கும்  காட்ச்சிகளில்  மின்னுகிறார். பன்ச்  வசனங்கள்  இல்லாத  திரைக்கதையில்  பசியோடு  இருக்கும்  புலியைபோலவே  விஜய்  தெரிகிறார். பாடிகாட்   சீருடை  அணிந்து  இருதோள்களையும் தூக்கிக்கொண்டு  அசின்  பின்னால்  நடந்து  செல்லும்  காட்சிகளில்  அருமை. தன்  காதலியிடமிருந்து  செல்போன்  அழைப்பு  வராதா  என  ஏங்கும்  காட்சியில் விஜயும் , விஜயின்  ஏக்கத்தைபார்த்து  துடித்துப்போகும்  காட்சியில்  அசினும்  திரைக்கதை  எனும்  மூக்கின்  இரு  துவாரங்களாய்   நம்மை  சுவாசிக்க  வைக்கிறார்கள்.            
                              பாடல்கள்  அனைத்தும்  அருமை. குறிப்பாக  ஸ்டெப் ஸ்டெப், யாரது   பாடல்கள்  சூப்பர். காதல்  மற்றும்  சோக  காட்சிகளில்  பின்னணி  இசையில்  வித்யாசாகர்   இன்னும்  கொஞ்சம்  வித்யாசப்படுத்தியிருக்கலாமோ   என்று  தோன்றுகிறது.                                                                        
                            மிக சிறந்த   திரைக்கதையில்  குழப்பமான  கிளைமாக்ஸ்சை   ஒரு  கவிதையாய்   முடித்திருக்கும்  சித்திக்  இயக்குனரல்ல  கவிஞன்.                                           
                             கிளைமாக்ஸ்   கவிதையில்  அனைவரும்  எழுந்து  கைதட்டியபோது   அதிர்ந்த  அரங்கினுள்   நானும்  இருந்தேன்  எனும்போது    விஜய்  ரசிகனாய்   மெய்  சிலிர்த்துப்போனேன்.  வாழ்த்துக்கள்  விஜய். உங்களுக்கும்  காவலன்  குழுவினர்க்கும்  இனிய  புத்தாண்டு  வாழ்த்துக்கள்.

செவ்வாய், 11 ஜனவரி, 2011

காவலன் தற்போதைய நிலவரப்படி.......

இளையதளபதி   விஜயின்    காவலன்   திரைப்படம்   தற்போதைய   நிலவரப்படி பொங்கலுக்கு  ரிலீஸ்   ஆகுமா  என்பது   இன்று  மாலை  தெரியும்   என   தியேட்டர்  வட்டாரங்கள்  தெரிவிக்கின்றன. டிக்கெட்  புக்கிங்கிற்காக  இன்று  காலை  சத்யம் தியேட்டரில் விசாரித்தபோது   இந்த  தகவலை   பெற  முடிந்தது. பொங்கலுக்கு  ரிலீஸ்  ஆகும்  மற்ற   படங்களுக்கான   புக்கிங்   செய்யப்பட்டு  வரும்  நிலையில்  காவலனுக்கான   புக்கிங்  மட்டும்  இன்னும்  ஆரம்பிக்காத  நிலையிலேயே  உள்ளதால்   என்னைப்போன்ற  விஜய்   ரசிகர்களுக்கு   மிகுந்த  ஏமாற்றத்தை  ஏற்படுத்துகிறது. சமீப  காலமாக    சோதனைகளை   மட்டுமே   தாங்கி  வரும்  தளபதிக்கு  அவருடைய   ரசிகர்களாகிய    நாங்கள்   எப்போதும்   துணை  நிற்போம். தடைகளை உடைத்தெறிந்து  தமிழ் திருநாளுக்கு தமிழனாய்,காவலனாய்  மீண்டெழ   இளைய தளபதிக்கு    வாழ்த்துக்கள். all  the  best .
                                                                                                        a.x.emmanuel joe fredy.