இளையதளபதி விஜயின் காவலன் திரைப்படம் தற்போதைய நிலவரப்படி பொங்கலுக்கு ரிலீஸ் ஆகுமா என்பது இன்று மாலை தெரியும் என தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டிக்கெட் புக்கிங்கிற்காக இன்று காலை சத்யம் தியேட்டரில் விசாரித்தபோது இந்த தகவலை பெற முடிந்தது. பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் மற்ற படங்களுக்கான புக்கிங் செய்யப்பட்டு வரும் நிலையில் காவலனுக்கான புக்கிங் மட்டும் இன்னும் ஆரம்பிக்காத நிலையிலேயே உள்ளதால் என்னைப்போன்ற விஜய் ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது. சமீப காலமாக சோதனைகளை மட்டுமே தாங்கி வரும் தளபதிக்கு அவருடைய ரசிகர்களாகிய நாங்கள் எப்போதும் துணை நிற்போம். தடைகளை உடைத்தெறிந்து தமிழ் திருநாளுக்கு தமிழனாய்,காவலனாய் மீண்டெழ இளைய தளபதிக்கு வாழ்த்துக்கள். all the best .
a.x.emmanuel joe fredy.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக